குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியர்.! அதிரடி உத்தரவிட்ட அமெரிக்க நீதிமன்றம்.!
america court order fifteen years jail to indian man for obscene vedio forward
அமெரிக்கா நாட்டில் சுற்றுலா நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணம் செய்த ஒரு பயணிக்கு செல்போன் மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி, போலீசார் விரைந்து வந்து விக்டரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு குறித்த விசாரணை அமெரிக்காவின் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
English Summary
america court order fifteen years jail to indian man for obscene vedio forward