சீன அச்சுறுத்தலை சமாளிக்க தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


சீன அச்சுறுத்தலை சமாளிக்க தைவானுக்கு 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், அமெரிக்கா இரண்டு போர் கப்பல்களை  அனுப்பியுள்ளது.

இந்நிலையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் மூலம் 60 கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள், 100 வான்வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், 355 மில்லியன் மதிப்பிலான ஹார்ப்பூன் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America decided to give 1 billion dollor worth weapons to taiwan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->