அமெரிக்காவின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் - ட்ரம்ப் பேட்டி.! - Seithipunal
Seithipunal


நேற்று உலகம் முழுவது 2023 ஆங்கிலப்புத்தாண்டை மிகச் சிறப்பாக வரவேற்று கோலாகலமாக கொண்டாடினர். அந்த வகையில், அமெரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலனியா டிரம்ப்புடன் சேர்ந்து, புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள தனது மார் எலாகோ பண்ணை வீட்டில், புத்தாண்டு தினத்தை கொண்டாடினார். 

கொண்டாட்டத்திற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் ஒரு இன்ப ஒளி மலரட்டும் என்று பேசினார். 

மேலும் ரஷிய, உக்ரைன் போர் குறித்து பேசிய அவர், ரஷியா-உக்ரைனுக்கு இடையே ஏற்பட்ட போர் இந்த ஆண்டு முடிவுக்கு வர வேண்டும். இந்த போரில், 3-ம் உலகப் போரை கட்டவிழ்த்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கவும், பணவிக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த ஆண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america ex president trumph press meet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->