அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் ஆரன் கார்ட்டர் மர்ம மரணம்.! - Seithipunal
Seithipunal


1987ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி அமெரிக்கா புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரன் கார்ட்டர்(34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் உள்ளனர். இவர் தனது 9 வயதில் 1997-ம் ஆண்டில் முதல் ஆல்பம் ஒன்றை அவர் வெளியிட்டார்.

"க்ரஷ் ஆன் யூ" என்ற வெற்றிப் பாடலைக் கொண்ட அவரது முதல் ஸ்டுடியோ ஆல்பதிற்கு டிசம்பர் 1997-ல் கோல்டன் சர்டிபிகேட் பெற்றார். பின்பு பேக்ஸ்ட்ரீட் பாய்ஸிற்காக ஒரு பதிவு ஒப்பந்தத்தில் கார்டரின் இசை வாழ்க்கையே தொடங்கினார். மிகவும் பிரபலமான பேக்ஸ்ட்ரீட் பாய்ஸில் இருந்து ஆரன் கார்ட்டர், 1990-களில் ஒரு பாப் நட்சத்திரமாக புகழ் பெற்றார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் ஆரனுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வேலி விஸ்டா டிரைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஆரன் கார்ட்டர் சந்தேகத்திற்குரிய வகையில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.

இதனை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி பகுதியின் ஷெரீப் அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America Famous pop singer aaron carter dead


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->