இனி மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கலாம்.. அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கக்கூடிய வேதி கலவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இயற்கையாக ஒரு மனிதன் குழந்தை, இளமை, வயோதிகம் என்ற 3 பருவங்களை கடந்து இறுதியில் மரணத்தை எட்டுவான். நீண்ட நாட்களாக மனிதர்களுக்கு வயதாவதை தடுக்க கூடிய வகையில், மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். 

அந்த வகையில், அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கக்கூடிய வகையில் ஒரு வேதி கலவையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கலவையை கண்டுபிடிப்பதற்கு 3 ஆண்டுகளாக அவர்களது விஞ்ஞானிகள் குழு தீவிரமாக பாடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

3 ஆண்டுகள் முடிவில் தற்போது வயதாவது தடுக்கும் வகையிலான மூலக்கூறுகளை அவர்களது குழு கண்டுபிடித்துள்ளதாகவும், முதற்கட்டமாக இந்த வேதி கலவையை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Harvard university scientists found anti aging Chemical


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->