புற்றுநோய்க்கு இனி தடுப்பூசி.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிடப்பட்ட அசத்தல் தகவல்.!
Americaan scientist said Cancer vaccine soon
புற்றுநோய் சிகிச்சைக்கு அடுத்த 5 ஆண்டுகளில் தடுப்பூசிகள் வரலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு எங்கும் தேசிய புற்றுநோய் மையம் புற்று நோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பல்வேறு நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தடுப்பூசி காண ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுடியை எட்டி உள்ளதாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜேம்ஸ் குல்லி தெரிவிக்கையில், புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும்.
பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பிறகு தடுப்பூசி சிகிச்சை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்பு முனையை எட்டி உள்ளோம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம் எனவும் இவை நோயை தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசிகள் புற்றுநோய் கட்டிகளை குறைக்கவும் புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும் தடுப்பூசிகளாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Americaan scientist said Cancer vaccine soon