ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைய அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்பியதே காரணமாக கருதப்படுகிறது.

உக்ரைனை தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் தனது ஆதரவினை தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American cenate approves Sweden Finland request to join NATO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->