அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி மரணம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 39 ஆவது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்டன். இவரது மனைவி ரோஸலின் கார்டன் (வயது 96). இவர் சமூக ஆர்வலர் மற்றும் மனநல ஆலோசகராக இருந்தார்.

மேலும் ஜிம்மி கார்ட்டர் அதிபராக இருந்தபோது ரோஸலின் அவருக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் டிமென்ஷியா என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரோஸலின் நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக ஜிம்மி கார்டன் தெரிவித்திருப்பதாவது, ''எனது மனைவி நான் சந்தித்த எல்லாவற்றிலும் உறுதுணையாக இருந்தார். 

எனக்கு தேவையான சமயங்களில் புத்திசாலித்தனமான வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தவர். இந்த உலகில் ரோஸலின் இருக்கும் வரை யாரோ ஒருவர் என்னை நேசித்தார் ஆதரவாக இருந்தார் என்பதை உணர்ந்தேன்'' என தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூலை மாதம் தங்களது 77வது ஆண்டு திருமண நாளை கொண்டாடிய இவர்கள் அமெரிக்க அதிபர்களில் நீண்ட நாள் தம்பதி என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American Ex president wife death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->