அமெரிக்காவில் வாழும் 1% அமெரிக்க இந்தியர்கள் 6% வரி பங்களிப்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வாழும் ஒரு சதவீத இந்திய அமெரிக்கர்கள் அந்நாட்டின் செலுத்தப்படும் மொத்த வரியில் 6 சதவீதம் பங்களித்து வருவதாக அமெரிக்க பிரதிநிதிகள் அவை எம்.பி. ரிச்சா்ட் மெக்காா்மிக் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் மற்றும் அமெரிக்கா குடியரசு கட்சியைச் சேர்ந்த ரிச்சா்ட் மெக்காா்மிக் முதன்முறையாக பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் முதல் முறையாக உரையாற்றியபோது அமெரிக்கா இந்தியர்கள், அமெரிக்க தேசத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவர்களாகவும், சிறந்த குடிமகன்களாகவும், நட்புடன் பழகுவார்களாகவும் விளங்குகின்றனர். 

அவர்கள் எந்த சமூகத்தில் எந்தவித பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை. நாட்டின் வரியில் 6 சதவீதம் பங்களிக்கின்றனர். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு சிறந்த குடிமகன்களாக வாழ்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா வளர்ச்சியில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் பொழுது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் எம் பி-ஆக தேர்வு செய்யப்பட்ட ஜாா்ஜியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கின்றனர் என்றும், அங்கு ஐந்து மருத்துவர்களில் ஒருவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American Indian contribute 6% of total tax in america


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->