ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான "அடக்குமுறை"... மனித குலத்திற்கு எதிரான "குற்றம்".! அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
Amnesty international says Oppression of women in Afghanistan is a crime against humanity
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், தனது ஷிரியா கொள்கையின் மூலம் பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இதில் பெண்கள் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, பெண் தொழிலாளர்களுக்கு தடை, பல்கலைக்கழகங்களில் பயில தடை, தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ய தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் பெண் சுதந்திரம் ஆப்கானிஸ்தானில் முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது விதிக்கப்பட்ட அடக்குமுறைகள் ஒரு பாலின அடிப்படையிலான துன்புறுத்தல் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் ஆணையம் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் மீதான அடக்குமுறை சர்வதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக போர் நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் மீதான தலிபான் அடக்குமுறை, சிறை தண்டனை, கல்வியின்மை மற்றும் வீட்டு சிறை ஆகிய உரிமை மீறல்கள் பெண்மை மீது பாலின துன்புறுத்தலை உருவாக்கக்கூடும் என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் நிலவும் பாலின ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தலை அகற்ற சர்வதேச சமூகத்திற்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைய பொதுச்செயலாளர் சாண்டியாகோ ஏ கேண்டன் அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
Amnesty international says Oppression of women in Afghanistan is a crime against humanity