உக்ரைன் தூதரகங்களில் விலங்குகள் கண்கள் உள்ள வினோத பார்சலால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ரஷியா உக்ரைனுக்கு இடையேயான போர் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த போரில் இருநாடுகளும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைனின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் ஒன்று அனுப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

விலங்குகளின் கண்கள் அடங்கிய இந்த பார்சல் மாட்ரிட் பகுதியில் உள்ள உக்ரைன் தூதரகத்தில் கிடைத்தது. ஆனால் அந்த பார்சலில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வந்த போலீசார் மோப்ப நாய்களுடன் தூதரகத்தை  சுற்றி தேட  ஆரம்பித்தனர். 

இந்த சம்பவம் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ தெரிவித்ததாவது, "ஒரு வினோத திரவத்தில் ஊறவைக்கப்பட்ட விலங்குகள் கண்கள் அடங்கிய இந்த பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதேபோன்று, நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன" என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, "சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு இருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

animals eye parcel in ukraine embasies office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->