இ-சிகரெட்டுக்கு தடை... ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு..!
Australia bans e cigarette
இளம் வயதினர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க இ-சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப் போவதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது. மேலும் புகையிலைத் தொழிலுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக்க போவதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்திரேலியா அரசு வெளியிட்ட அறிக்கையில், புகைப்பழக்கத்திலிருந்து விடுவிக்கப் போவதாக விளம்பரப்படுத்தி இ-சிகரெட்டுகள் தவறான முறையில் விற்கப்படுவதாகவும், சாதாரண சிகரட்டை போலவே இ-சிகரெட்களும் புற்றுநோய், சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ-சிகரெட்டிலும் நிக்கோட்டின் மற்றும் வீரியமிக்க ரசாயனங்கள் கலக்கப்படுவதால் நாளடைவில் அவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவார்கள் என்றும், சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் போதைப் பொருள்களுக்கும், வேப்பிங் முறைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
English Summary
Australia bans e cigarette