போரில் உயிரிழந்த கர்ப்பிணி.. உயிருடன் குழந்தை மீட்கப்பட்ட அதிசயம்.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பில் நடத்திய தாக்குதலுக்கு பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போரில் தற்போது வரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உலக நாடுகள் பல கோரிக்கை விடுத்தம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில் காஜாவில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ரஃபா நகரில் இஸ்ரேல் படையினர் இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 சிறுவர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 மாத கர்ப்பிணியான சபரீன் அல் சஹானி அவரது கணவர் மற்றும் குழந்தையும் உயிரிழந்தனர். 

அந்த கர்ப்பிணியை மீட்ட மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்து பச்சிளம் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்டுள்ளனர். அந்த குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவர்கள் தற்போது மற்ற குழந்தைகளுடன் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby rescue from died pregnant lady in Gaza


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->