ரஷ்யாவில் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்து முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றின.

இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதால், வீரர்களை அணி திரட்டுவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

மேலும் ரஷ்யா அதிபர் புடின் 3 லட்சம் ரஷ்ய வீரர்களை அணி திரட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதையடுத்து ரஷ்ய வீரர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்லும் முயற்சியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் வரும் சனிக்கிழமை வரை அண்டை நாடுகளுக்கு செல்லும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யா அதிபர் ராணுவ ஆட்சியை அறிவிக்கக்கூடும் என்பதால் 18 முதல் 65 வரையிலான ஆண்கள் வெளிநாடுகளை செல்லும் முயற்சியை தடுக்க அவர்களுக்கு விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளை 6 மாதத்திற்கு ராணுவத்தில் சேர்க்கவும், பணி நிறைவடைந்ததும் இந்திய ரூபாயின் மதிப்பில் 1.25 லட்சம் வழங்கப்பட்டு பொதுமனிப்பு வழங்கப்படும் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban of sale flight tickets to men 18 to 65 years in Russia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->