இலங்கையில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை.!!
Ban on Carrying on mutton and beef in srilanka
இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் இரவு நேரங்களில் வீட்டிலேயே தங்கும் படி சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் கடுமையான குளிரினால் ஆடுகள், மாடுகள் மற்றும் ஏராளமான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 836 மாடுகள், 256 ஆடுகள் மற்றும் 34 எருமை மாடுகள் பலியாகி உள்ளன.
இந்நிலையில் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் மக்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க நாடு முழுவதும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி எடுத்து செல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இறந்த கால்நடைகளின் மாதிரிகளை சோதனைக்குட்படுத்த ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Ban on Carrying on mutton and beef in srilanka