வங்கதேச முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தப்பி செல்ல முயற்சி! எல்லை காவல் படையினரால் கைது! - Seithipunal
Seithipunal


அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மாதம் வரை நீடித்தது. இதன் காரணமாக இந்த மாதம் 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் இடம் பிடித்துள்ளனர். பிறகு ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் பதியப்பட்டு வங்கதேச போர்க்குற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் வங்கதேச முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது அவரை எல்லை காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

பின்னர் அவாமி லீக் கட்சியின் தலைவர் பிரோஸ் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சில மணிநேரத்திற்கு பின்னர் இந்த தகவல் வெளியானது.

மேலும் ஷேக் ஹசீனா அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh ex supreme court judge trying to escape Arrested by border guards


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->