இந்தியாவில் இருந்து விமானத்தில் பறந்த பறவைக் காய்ச்சல்..!!
Bird Flu Spread to Australia From India
மரபணு மாற்றம் செய்யப்பட H5N1 வைரஸ் தென்கிழக்கு ஆசியாவில் தான் அதிகம் பரவியது. பறவை இனங்களை சேர்ந்த கோழியில் இந்த தொற்று கண்டறியப்பட்டது. கோழி இறைச்சி உண்பதன் மூலம் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்பட்டது.
எனினும் இந்த வைரஸின் மூலம் எது என்று இன்னும் சரிவர தெரியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 2 வயது குழந்தைக்கு H5N1 வகை பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த குழந்தை இந்தியாவிற்கு சென்று வந்ததையடுத்து இந்தியாவில் இருந்து அக்குழந்தைக்கு இந்த தொற்று பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. முன்னதாக பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 19 வரை இந்தியாவின் கொல்கத்தாவிற்கு சென்ற குழந்தை மார்ச் 1ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ளது.
இதையடுத்து மார்ச் 2ம் தேதி விக்டோரியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை, தொடர்ந்து 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சையில் இருந்தது. இந்த நோய்த்தொற்று எப்படி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விக்டோரியா மாகாண சுகாரத்துறை கூறுகையில், "எப்போதும் உயிருள்ள பறவைகள் உள்ள பண்ணை அல்லது சந்தைக்கு சென்றால் இந்த நோய்த்தொற்று மனிதர்களிடம் பரவும்.
மிகவும் அரிதாகவே கோழிகள் இத்தொற்றால் பகுதிக்கப்பட்டு, அவற்றின் இறைச்சி மற்றும் முட்டையை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. தொடர்ந்து இத்தொற்று குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.
English Summary
Bird Flu Spread to Australia From India