இத்தாலியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து.. 43 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


இத்தாலியில் புலம் பெயர்ந்தவர்களை ஏற்றி வந்த படகு விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

மேலும், படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்தாலிய கடலோர நகரமான குரோடோனை நெருங்கிக் கொண்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது படகு மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், படையில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boat capsized in the middle of the sea in Italy 43 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->