உக்ரைன் அதிபருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதை வழங்கி கவுரவித்த போரிஸ் ஜான்சன்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா, அமெரிக்கா நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை தொடர்ந்து அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

போரினிடையே கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து, இங்கிலாந்து எப்பொழுதும் உக்ரைனுக்கு துணையாக நிற்கும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இங்கிலாந்தின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை போரிஸ் ஜான்சன் வழங்கி கவுரவித்துள்ளார்.

மேலும் இது குறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

'இன்று வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம், எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும், கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை இணைத்து, உலகளாவிய ஒற்றுமை அலைகளை தூண்டிவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த விருது அவரது முயற்சிகளை மட்டுமல்ல போரில் தங்களை வேறுபடுத்திக் காட்டிய பல்லாயிரக்கணக்கான உக்ரைன் வீரர்களின் வீரத்தையும் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boris Johnson gives Churchill award to Ukraine president Zelensky


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->