அமெரிக்காவில் சோகம் - கருக்கலைப்பு செய்த காதலியை தலையில் சுட்டுக் கொன்ற காதலன் கைது.!
boy arrested for kill girl friend in america texas
அமெரிக்காவில் சோகம் - கருக்கலைப்பு செய்த காதலியை தலையில் சுட்டுக் கொன்ற காதலன் கைது.!
அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ஹரோல்டு தாம்ப்சன். இவர் கேப்ரியல்லா கொன்சேல்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நாளடைவில் இருவருக்குமிடையே காதல் அதிகமானதால் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இதில், கேப்ரியல்லா கொன்சேல்ஸ் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில், கொலராடோவுக்கு பயணம் செய்த கேப்ரியல்லா கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். ஏனென்றால் கொலராடோவில் கருவுற்ற பெண்கள், கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ சந்தித்து சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளார். உடனே கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டுள்ளார்.
இதில், கொன்சேல்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொன்சேல்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் காதலியை கொலை செய்த தாம்ப்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
boy arrested for kill girl friend in america texas