19 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இன்ஸ்டா பிரபலம்.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டின் சமூக வலைதளமான இன்ஸ்டா பிரபலமாக இருந்த மரியா சோபியா வலிம் என்பவர் உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். 

இதன் மூலம் இளைஞர்களிடையே பிரபலமான இவர் தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்டுகள் குறித்தும் தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டு வந்ததால் நல்ல வருமானம் கிடைத்து வந்தது. இவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பத்தொன்பது வயதேயான இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவானது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. 

அதன் பின்னர், அவர் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் மரியா அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் மரியா பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தத் தகவலை மரியாவின் தந்தையே உறுதி செய்துள்ளார். இதையடுத்து மரியாவின் மரணத்திற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brezil insta celebrity sofiya mariya died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->