ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரவு.!
Britain and France support India permanent membership in the UN Security Council
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு மாதந்தோறும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி ஏற்கும் நிலையில், டிசம்பர் மாதத்திற்கு இந்தியா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது.
இதையடுத்து பன்னாட்டு அமைப்புகளின் சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாத தடுப்பு தொடர்பான இரு முக்கிய நிகழ்வுகள் இந்தியா தலைமையின் கீழ் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில், சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதி தொடர்பான விவாதம் நியூயார்க்கில் நடைபெற்றது.
இதில் இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிங் நிரந்தர உறுப்பினராகவதற்கு பிரான்ஸ் ஆதரவளிப்பதாக அந்நாட்டின் தூதர் நிக்கோலஸ் டிரிவியா் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய பிரிட்டன் தூதா் பார்பரா உட்வேரிர்ட், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இந்தியா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை நிரந்தர உறுப்பினராக சேர்ப்பதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்தியாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
Britain and France support India permanent membership in the UN Security Council