ரஷ்யாவின் தடையால் உக்ரைன் ராணுவ உபகரணங்களை பழுது பார்க்கும் பணி தடைபடாது - பல்கேரியா அரசு.!
Bulgaria assure the repair work of Ukraine military equipments
ரஷ்யாவின் தடையால் உக்ரைன் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி தடை படாது என்று பல்கேரியா அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்போரில் ரஷ்யா மீதான பொருளாதார தடை காரணமாக ரஷ்யா தன்னுடன் வணிகம் செய்யும் நாடுகள் ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.
இந்நிலையில் ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்களின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு 2 பல்கேரிய நிறுவனங்களுக்கும், ஒரு செக் குடியரசு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
மேலும் பல்கேரிய நிறுவனங்களுக்கு ரஷ்யா இனி உதிரி பாகங்களை வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது பல்கேரியாவை பாதிக்காது என்றும், உக்ரைனின் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணியை தடுக்காது என்றும் பல்கேரிய ராணுவ அமைச்சர் ஜாகோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு ரூபிளில் பணம் செலுத்த மறுத்ததால், பல்கேரியாவிற்கு எரிவாயு நிறுத்தியதை சுட்டிக்காட்டிய ஜாகோ, உக்ரைன் ராணுவ உபகரணங்களை சரிசெய்வதை பல்கேரியா தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Bulgaria assure the repair work of Ukraine military equipments