தொடர் விபத்து... சிலி நாட்டில் நேருக்கு நேர் மோதிய ரெயில்கள்! உடல் நசுங்கி உயிரிழந்த 2 பேர்.!
Chile trains collide head 2 dead
தென் அமெரிக்கா, சிலி தலைநகரம் சாண்டியா கோவில் இருந்து பயணிகள் புதிய ரயில் புறப்பட்டது. வேத சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.
அதே சமயத்தில் 1500 டன் தாமிரபொருட்களை ஏற்றுக் கொண்டு சரக்கு ரயில் அதே வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதால் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி சரக்கு ரயிலின் மீது ஏறியது.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 4 சீனர்கள் உள்பட 9 பேர் படுகாயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Chile trains collide head 2 dead