சீனா-பூடான் எல்லைப் பிரச்சனை: பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த இருநாடுகளும் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


ஆசிய நாடுகளான சீனா மற்றும் பூடான் இடையேயான நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இதில் சீனாவின் டோக்லாம், பூடானின் மேற்கு எல்லைகள் மற்றும் பூடானின் வடக்கு எல்லையில் உள்ள ஜகர்லுங் மற்றும் பசம்லுங் பகுதிகளில் எல்லைகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இரு நாடுகள் இடையே உள்ளது.

மேலும் இரண்டு நாடுகளுக்கிடையே தூதரக உறவுகள் இதுவரை இல்லாத நிலையில், உயர்மட்ட அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பிரச்சினையை தீர்க்க இரண்டு நாடுகளும் முயன்று வருகின்றன. இந்நிலையில் சீனா-பூடான் எல்லை பிரச்சினைகள் தொடர்பாக 11வது நிபுணர் குழு கூட்டம் சீனாவின் குன்மிங் நகரில் ஜனவரி 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பூடானின் சர்வதேச எல்லைகளின் செயலாளர் தாசோ லெத்தோ டோப்தென் டாங்பி தலைமையிலான பூடான் பிரதிநிதிகள், ஹாங் லியாங் தலைமையிலான சீனக் குழுவைச் சந்தித்தனர்.

இதையடுத்து எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடுகளும் ஒற்றறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் 11வது நிபுணர் குழு கூட்டத்தில் ஒரு சுமூகமான, வெளிப்படையான ஆக்கபூர்வமான சூழ்நிலையில், சீனா-பூடான் எல்லைப் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும், அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது பற்றிய ஆழமான கருத்து பரிமாற்றம் கூட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்லை பிரச்சனைகள் குறித்த ஒருமித்த கருத்தை இரு நாடுகளும் எட்டியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Bhutan agree to expedite negotiations to resolve border dispute


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->