சீனாவில் கொரோனாவுக்கு 60000 பேர் பலி! உலக சுகாதார நிறுவனம் விடுத்த வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, உலக சுகாதார நிறுவனம் சீனாவை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 30 நாட்களாக சீனாவில் கொரோனா பரவல் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது குறித்த தகவல்களை அந்நாட்டின் அரசாங்கம் மறைத்து வருவதாக உலக நாடுகள் பலவும் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் தனது 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கையை சீனா கைவிட்டதிலிருந்து இந்த நோய் தொற்று பரவல் அதிகாரித்து உள்ளதாகவும், 60 ஆயிரம் பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும், சீன சுகாதார ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீன நாடு முதன்முறையாக நேற்று வெளியிட்டுள்ள கொரோனா இறப்பு குரித்த எண்ணிக்கையில், கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு, ஐயாயிரம் பேர் இறந்துள்ளதாகவும், கொரோனா தொற்று உடன் இணை நோய் இருந்த 54,000 பேர் இறந்துள்ளதாகவும் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சீனாவின் நிலைமை மோசமாக இருப்பதால், இது குறித்த கூடுதல் தகவல்களை வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீன நாட்டை கேட்டுக் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Corona Death Report 15012023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->