டிவிக்கு அடிமையான குழந்தைகளை மீட்க சூப்பர் டிப்ஸ்.! சீன தம்பதி அசத்தல்.!
china couples change her son from tv addict
சமீபகாலமாகவே செல்போன் மற்றும் தொலைக்காட்சிக்கு குழந்தைகள் அடிமையாகி விடுகின்றனர். பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினால் உடனே ரிமோட்டையோ அல்லது ஸ்மார்ட்போனையோ கையில் எடுத்து விடுகின்றனர்.
அது போல காலை எழுந்தது முதல் பள்ளிக்கு கிளம்பும் வரை டிவியை, செல்போனையோ நோண்டிக்கொண்டே தான் இருப்பார்கள். இது எதையாவது தவிர்த்தால் வேறு விதமாக பெற்றோர்களை டார்ச்சர் செய்கிறார்கள் என்பதால் அவர்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
ஆனால் இது அவர்களது கண்களுக்கும், மன நிலைக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகளை இதிலிருந்து காப்பதற்கு ஆயத்தமாக வேண்டும். அந்த வகையில் சீனாவில் அதிக அளவில் டிவி பார்த்த தங்களது எட்டு வயது மகனை அதிலிருந்து மீட்க ஒரு தம்பதி இரவு முழுவதும் அந்த சிறுவனை டிவி பார்க்க வைத்திருக்கின்றனர்.
அந்த சிறுவன் உறங்கினாலும் கூட மீண்டும், மீண்டும் எழுப்பி விட்டு அந்த சிறுவனை டிவி பார்க்க வைத்துள்ளனர். இதனால், அந்த சிறுவன் கடுப்பாகி தனது நடத்தையில் மாற்றம் செய்துள்ளான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது தற்போது பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது.
English Summary
china couples change her son from tv addict