விலா எலும்புகளே நொறுங்குமளவுக்கு கட்டிப்பிடித்த நபருக்கு, 1.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மார்பில் இருக்கும் விலா எலும்புகள் முறியும் அளவிற்கு பெண் ஊழியரை கட்டியணைத்த சக ஊழியருக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் சேர்ந்த ஒரு பெண் ஊழியர் கடந்தவருடம் தன்னுடன் பணிபுரிந்த நண்பர் ஒருவர் தன்னை விலா எலும்புகள் முறியும் அளவிற்கு கட்டி அணைத்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த புகாரில் தன்னுடன் பணிபுரிந்து வந்த ஆண் நண்பர் திடீரென விலா எலும்புகள் நொறுங்கி போகும் அளவிற்கு கட்டி அணைத்து தாகவும், இதனால் என் மார்பில் மூன்று விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் எனக்கு மிகுந்த மருத்துவ செலவு ஏற்பட்டது. 

மேலும்,  விடுப்பு எடுத்தால் சம்பளமும் கிடைக்காமல் போனது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 1500 டாலர் அபராதம் விதித்து இதை அந்த பெண்ணுக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவு பிறப்பித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Court Fine To men who broke Colleague Bone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->