இந்திய எல்லைப் பகுதியில் படை குவிப்பில் ஈடுபடவில்லை - சீனா - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா- சீனா எல்லை பகுதியான காள்வன் பள்ளத்தாக்கில், இந்திய-சீன விரர்களுக்கிடையே இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதையடுத்து எல்லை பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஆயுத குவிப்பிலும், படை குவிப்பிலும் ஈடுபட்டதற்கு சமீபத்தில் அமெரிக்கா சீனாவை குற்றம் சாட்டியது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு சீனா முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைநகர் டெல்லியில் உள்ள தூதரகத்தில் சீன செய்தி தொடர்பாளர் கூறும்பொழுது, எல்லையில் நிலைமை சீராக உள்ளதாகவும், சீனா படைகுவிப்பில் ஈடுபடவில்லை எனவும், எல்லை பிரச்சனைகள் தொடர்பாக இரு நாடுகளும் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையில், மூன்றாவது நாடான அமெரிக்கா கருத்து தெரிவிப்பதை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China denies US accusations as deploying troops in India border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->