ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே சீனாவின் டயர் தொழிற்சாலை.. இலங்கையில் வேலையை ஆரம்பித்த சீனா.! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டில் சீனா தொடர்ந்து தனது முதலீடுகள் மூலமாக ஆதிக்கம் செய்து வருகிறது. இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கலாம் என சீனா சிந்தித்து செயல்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கு கடன்களை வாரி வழங்கி வருகிறது. 

இந்நிலையில், இலங்கை நாட்டில் உள்ள ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு அருகிலேயே, ரூ.2,210 கோடி செலவில் சீனாவின் டயர் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், சீனாவிடம் இருந்து இலங்கை 1.4 பில்லியன் டாலர் கடன்களை கட்ட தவறியதன் காரணமாக, இதனை வைத்து சீனா டயர் தொழிற்சாலை அமைக்க இலங்கையை உபயோகம் செய்துள்ளது. 

மேலும், தாராளமான வரி சலுகையை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் டயர் தொழிற்சாலை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதலும் வழங்கியுள்ள நிலையில், 80 விழுக்காடு உற்பத்தி ஏற்றுமதிக்கு, 20 விழுக்காடு உற்பத்தி உள்ளூர் சந்தைகளின் விற்பனைக்கும் அனுமதிக்கப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சீனாவின் செயல்பாடுகளை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Make tire Factory in SriLanka Hambantota Harbor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->