நெல்லை: நீதிமன்ற வாசலில் வைத்து இளைஞர் கொலை..! போராட்டத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி என்ற நபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று காலை நெல்லை நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். 

அப்போது, காரில் வந்த நால்வர் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்ததுடன், அவரின் தலையை சிதைத்து விட்டுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு இருந்தபோதிலும், இந்த துணிகர கொலை சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயாண்டி மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கொலை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Court Youngster Murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->