தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்கா.! சீனா எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இண்டியானா மாகாண கவர்னரின் தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்துக்குள்ளாக்கியது.

இதனால் தைவானுக்கும், சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 60 கப்பல் ஏவுகணை தடுப்பு சாதனங்கள், 100 வான்வழி தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள், 355 மில்லியன் மதிப்பிலான ஹார்ப்பூன் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை தைவானுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீன தூதராக செய்தி தொடர்பாளர் லியு பெங்யு, தேவையான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China opposes US decision to supply weapons to Taiwan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->