சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்று கொள்ள முடியாது - இலங்கை - Seithipunal
Seithipunal


சீனாவின் ஆய்வு மற்று ஆராய்ச்சி கப்பல் 'யுவான் வாங் 5' இலங்கையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருவது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கருதி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்த பின்னர் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் இலங்கை வரும் நிலையில் 22-ந் தேதி வரை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்பை ஏற்று கொள்ள முடியாது என இலங்கை எம்.பி சர்த் வீரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேவைகளுக்காக இலங்கையின் வெளியுறவு கொள்கையை மாற்ற முடியாது என்றும், சீன கப்பல் இந்தியாவை உளவு பார்க்க அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது என்று கூறுவது ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China ship comes to srilanka depite India opposes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->