உலகின் முதல் மீத்தேன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய சீனா!
China successfully launched the world's first methane fueled rocket
சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.
ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 09:00 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இதன் மூலம் குறைந்தளவு மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது.
மேலும் திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இரண்டாவது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையையும் லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது. லேண்ட்ஸ்பேஸ் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஜுக்-2 ராக்கெட்டை ஏவ முயற்சித்து தோல்வியை கண்டது. இதன் பின்னர் தற்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
English Summary
China successfully launched the world's first methane fueled rocket