தைவான் எல்லை பகுதியை சுற்றி சீனா போர் பயிற்சி..!
China war exercise on Taiwan border
தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகளின் அடுத்தடுத்த தைவான் பயணம் சீனாவை கடும் கோபத்திற்குள்ளாகியது. இதையடுத்து தைவான் எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து போர் பயிற்சி நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்கா வழியாக கவுதமலா மற்றும் பெலிஸ் ஆகிய தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்பு தைவான் திரும்பும் பொழுது சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தைவான் அதிபரின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்ததுடன், தைவான் எல்லைப் பகுதியை சுற்றி போர் பயிற்சியில் ஈடுபட்டது. இது தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,தேசிய இறையாண்மை மற்றும் மாகாண ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், தைவானின் ஆத்திரமூட்டலுக்கு இந்த போர் பயிற்சி உறுதியான பதில் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் இரு நாடுகளுக்கிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
English Summary
China war exercise on Taiwan border