தைவான் கடல் எல்லையில் நிற்கும் சீன போர்க்கப்பல்கள் - Seithipunal
Seithipunal


தைவான் மீது சீனா போர் தொடுக்க கூடும் என்ற நிலையில் சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி வருகை தந்து அதிபரை சந்தித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனா போா்ப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

மேலும் தைவான் கடல் பகுதியில் சீனா மேற்கொண்ட போா்ப் பயிற்சியின்போது, எல்லைக் கோட்டை சீனாவின் நாட்டு போா்க் கப்பல்களும், போா் விமானங்களும் பல முறை கடந்து தைவான் எல்லைக்குள் நுழைந்தன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத படை விலக்கப் பகுதியான தைவானின் நீரினை கோட்டுக்கு அருகே இரு நாடுகளின் 10 போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து படை விலக்கப் பகுதியில் சீனாவின் நடவடிக்கையை கூர்ந்து கண்காணித்து வருவதாகவும், முப்படைகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தைவான் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China warship in stationed in Taiwan sea line


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->