தைவான் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் 25 போர் விமானங்கள்.! மீண்டும் போர் பதற்றம் அதிகரிப்பு.!
Chinese 25 warplanes enter Taiwan territory
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அமெரிக்கா பிரதிநிதிகளின் தைவான் பயணம் சீனாவை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஜப்பான், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளின் தைவான் பயணம் சீனாவை மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.
இதனால் தைவான் எல்லை பகுதியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டும், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தி தைவானை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தைவான் எல்லைக்குள் நேற்று சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சீனா ராணுவத்திற்கு சொந்தமான குண்டு வீசும் 25 போர் விமானங்கள் தைவான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், சீனாவின் 3 போர்க்கப்பல்கள் தைவானின் தென் கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தைவானின் போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் கண்காணிப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தைவான் வான் மற்றும் கடலோர ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் இந்த நடவடிக்கையால் தைவான் எல்லைப் பகுதிகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
English Summary
Chinese 25 warplanes enter Taiwan territory