அமெரிக்கா மீது சீனா ஏவுகணை?....பசிபிக் பெருங்கடலில் சீனா செய்த அந்த சோதனை என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


சீன பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக, பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சோதனை சீன ராணுவத்தின் வருடாந்திர பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாகவும்,  எந்த நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக சோதனை நடத்தப்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த ஏவுகணை அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையக்கூடியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 சீனா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், சமீப காலமாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஏவுகணை சோதனைகள் அதிகரித்து வருவதால்,  சீனாவின் ஏவுகணை சோதனை இன்று நிகழ்த்தப்பட்டதாகவும்,  இது குறித்து சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese missile on America Do you know what the Chinese test was in the Pacific Ocean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->