காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும்.. அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காதலர் தினத்தை முன்னிட்டு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று காதலர்கள் நெருக்கமாக ஒன்றாக இருப்பதால் பாலியல் நோய் பரவல், இளம் வயதில் கருவுறுதல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக காதலர் தினத்தில் 9 கோடி 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு பாலியல் நோய் பரவல், இளம் வயதில் கருவுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் அரசு வழங்கும் இலவச ஆணுறைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Condoms will be provided free of charge on Valentine's Day in Thailand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->