சீனாவில் உச்சத்தை தொட்ட வெப்பநிலை.! 50 லட்சத்திற்கும் அதிகமானோர் மின்தடையால் பாதிப்பு - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதமாக சீனாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் அதிகரிக்கும் வெப்பநிலையால் சீனாவில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடும் வெப்பத்தால் நீர் தேக்கங்கள் வறண்டுபோயுள்ளதால் நீர்மின் நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தடைப்பட்டு, மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொடர் மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் தொடர் மின்தடையின் காரணமாக சிச்சுவான் மாகாணத்தில் 19 நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Continuous power cut affects people in China


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->