தொடர் மழையால் விமான நிலையம் முடக்கம் - தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி நாட்டின் மாநிலமான ஹெஸ்ஸில் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையம் உள்ளது. 

பல நாடுகளுக்கு முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக ஐரோப்பாவில் உள்ள இந்த விமான நிலையம் செயல்படுவதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். 

சில நாட்களாக ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் கனமழை பெய்து வருவதால் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும், ஓடுதளங்களிலும் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பியுள்ளது. 

இதனால் அங்கு வந்து தரையிறங்கும் விமானங்களில் இருக்கும் பயணிகள் இறங்கி, நிலையத்தை அடைந்து தங்களின் அடுத்த பயண இலக்குகளை அடைய முடியாமல் தவிக்கின்றனர். 

சுமார் 2 மணி நேரம் விமான நிலைய தரை கட்டுப்பாட்டு சேவைகள் முடக்கப்பட்டு, இதனால் 70 விமானங்களின் பயணம் ரத்தானது. 

மேலும் தரையிறங்க வேண்டிய 23 விமானங்களின் வருகையும் மாற்றியமைக்கப்பட்டது. இது குறித்து பல விமானங்களுக்கு நிலையத்தை நெருங்கும் முன்பே, வானிலை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

இதன் காரணமாக சுமார் 1000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை ஹெஸ் மாநிலம் முழுவதும் ஜெர்மன் வானிலை அமைப்பால் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்களாகும். ஒரு மணி நேர இடைவெளியில் வானிலை அதிகாரிகள் அம்மாநிலம் முழுவதும் 25,000 மின்னல்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

continuous rain airport blocked peoples suffering


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->