காணாமல் போன விவசாயி 4 நாட்களுக்கு பிறகு முதலை வயிற்றில் கண்டெடுப்பு.! - Seithipunal
Seithipunal


மலேசியாவின் காணாமல் போன விவசாயி 4 நாட்களுக்குப் பிறகு முதலை வயிற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியா நாட்டில் தாவோ பகுதியை சேர்ந்தவர் 60 வயதான விவசாயி அத்தி பங்சா. இவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து காணாமல் போன விவசாயியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் கடைசியாக சென்ற இடத்தில் முதலைகளின் நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து விவசாயியை முதலை விழுங்கி இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தேடுதல் நடத்தினர். அப்போது அங்குள்ள நீர்நிலை ஒன்றில் முதலில் ஒன்று அசைவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் உதவியோடு முதலையின் வயிற்றில் மனித உடல் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து முதலையின் வயிற்றைப் பிளந்து சடலத்தை வெளியே எடுக்க முடிவு செய்தனர.  அதன்படி துப்பாக்கியால் முதலையை சுட்டு கொன்று சடலத்தை வெளியே எடுத்தனர். இதில் முதலையின் வயிற்றில் இருந்த சடலத்தின் மீதி பாகங்களின் அடையாளங்களை வைத்து முதலைக்கு இறையானது அத்தி பங்சா என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர். 

மலேசியாவில் முதலைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் முதலைக்கு இரையாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crocodile swollowed former in Malaysia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->