லடாக்கின் உயரிய விருதைப் பெறுகிறார் புத்த மதத்தலைவர் தலாய்லாமா.! - Seithipunal
Seithipunal


லடாக்கில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பிரபலங்களுக்கு லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 6வது மற்றும் இந்த ஆண்டின் உயரிய சிவிலியன் விருதினை திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மனிதாபிமான செயல்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த லடாக் யூனியன் பிரதேசத்தில், அவர் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்க்யால் தெரிவித்துள்ளார்.

மேலும் வலிமை மிக்க சிந்து நதியால் லடாக் மற்றும் திபெத் ஆகிய பிரதேசங்கள் மத மற்றும் கலாசார ஒற்றுமைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் லடாக்கில் தலாய்லாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dalai Lama honoured with Ladakhs highest civilian award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->