அமெரிக்கா : நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்.! கிரேன் மூலம் அகற்றம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் லிடோ கடற்கரை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சுமார் 35 அடி நீளம் உடைய ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. 

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் அதனை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் அந்த ராட்சத திமிங்கலத்தைப் பார்த்த அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி, அவர்கள் விரைந்து சென்று திமிங்கலத்தை கடலுக்குள் விடும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், அதற்குள் திமிங்கலம் இறந்துள்ளது. அமெரிக்காவில் கிழக்கு கடற்கரையில் உள்ள திமிங்கலங்கள் இப்படி மர்மமான முறையில் இறந்து, கரை ஒதுங்குவது ஒரு தொடர் கதையாகி வருகிறது. 

இதைத்தொடர்ந்து, மீட்பு குழுவினர் அந்த ராட்சத திமிங்கலத்தை கிரேன் மூலம் கடற்கரையில் இருந்து எடுத்துச் சென்றனர். தற்போது நியூயார்க் மாகாணத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தையும் சேர்த்து, கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மொத்தம் பதினைந்து திமிங்கலங்கள் இறந்து, கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dead giant whale discovered on lido beach in new yark


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->