பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு.! பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அந்நாட்டில் உள்ள சவொ பாலோ மாகாணத்தில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்து உள்ளனர். 

மேலும், பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death count 36 increase in brezil floods and land slide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->