சூடான் ராணுவ மோதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் தலைநகர் கார்ட்டூம் உட்பட பெரும்பாலான இடங்களில் குண்டுவெடிப்புகளும், தாக்குதலும் நடைபெற்று வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களை சூடானிலிருந்து மீட்க தூதுரங்கன் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் உள்நாட்டு போரினால் சூடானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 413ஆக உயர்ந்துள்ளதாகவும், 3551 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற தீவிரத் தாக்குதலில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பயங்களின் மீது 11 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு தேவையான உதவியை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனிடையே சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rised to 413 in Sudan army violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->