அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!...2 கோடி குடும்பங்களுக்கு ஆப்பு வைக்க ட்ரம்ப் திட்டம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தலில், 538 இடங்களில் குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ட்ரம்ப் 248 வாக்குகள் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக  ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, டிரம்பின் பிரசார மேலாளராக இருந்து வந்த சூசி வைல்ஸ் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக  டிரம்ப் நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக அமெரிக்காவில்  குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்தார்.

தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர், டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி பெருமளவிலான புலம்பெயர்ந்தவர்கள்  நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இது தான் உண்மைதான் என்று
டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையால் நேரடியாக 2 கோடி குடும்பங்கள் பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Declaration of emergency in the united states trump plan to put a wedge for 2 crore families


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->