டெல்லி | ஆன்லைனில் ஆர்டர் செய்து நான்கு ஆண்டுகளுக்கு பின் கிடைத்த பார்சல்! டிவிட்டரில் இப்ப இதான் ட்ரண்ட்! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் முதல் சாப்பிடும் உணவு பொருட்கள் வரை 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அது போல, டெல்லியை சேர்ந்தவர் நிதின் அகர்வால் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவை சேர்ந்த பிரபல 'ஆன்-லைன்' தளமான அலி எக்ஸ்பிரசில் ஒரு ஆர்டர் செய்துள்ளார். அந்த  ஆர்டருக்கான பணத்தையும் அப்போதே செலுத்தியுள்ளார். 

பின்னர் சீனாவில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் ஆன்லைன் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

அதனை அடுத்து 2020-ம் ஆண்டு மத்திய அரசு, சீன செயலிகளான 'டிக்-டாக்' உள்ளிட்ட பல ஆன்லைன் செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் ஆன்லைன் சேவையாக இருந்த அலி எக்ஸ்பிரஸ் செயலியும் ஒன்றாகும். 

செயலியின் சேவைகள் தடைபட்டதால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆர்டர்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு, பலரும் தங்களது ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றனர். ஆனால் நிதின் அகர்வால் தனது ஆர்டரை ரத்து செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி நிதின் அகர்வால் வீட்டிற்கு மற்றொரு டெலிவரி நிறுவனத்தில் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதில், 4 வருடங்களுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் இருந்ததை பாத்தது வியப்படைந்த நிதின் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பார்சலின் புகைப்படத்தை பகிர்ந்ததில், தற்போது வைரலாகி வருகிறது. அதில் பலரும் நீங்கள் ஆர்டர் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi after 4 years online delivery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->