F-16 போர் விமானங்கள்: உக்ரைனுக்கு வழங்க டென்மார்க் தயார்..!!
Denmark ready to send F 16 jets to Ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதற்காக உக்ரைன், மேற்கத்திய நட்பு நாடுகளிடம் நவீன போர் விமானங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆனால் மேற்கத்திய நாடுகள் இதுவரை ரஷ்யாவிற்குள் சென்று தாக்கும் திறன் கொண்ட போர் விமானங்களை அனுப்ப மறுத்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய நாடான டென்மார்க், எப்-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய டென்மார்க் பாதுகாப்புதுறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன், ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பும் முடிவை டென்மார்க் எடுத்துள்ளது என்றும், உக்ரைன் போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு அவசியமாக இருக்கும் என்பதை நான் நிராகரிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 1970-களிலிருந்து 77 F-16 ஜெட் விமானங்களை டென்மார்க் வாங்கியதாகவும், அவற்றில் 30 தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Denmark ready to send F 16 jets to Ukraine