சட்டவிரோத ஏலியன்கள் நாடு கடத்தல்! வீடியோ ஒன்றை வெளியிட்ட வெள்ளை மாளிகை....! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு தலைமையில், அமெரிக்காவில் ஆவணமின்றிச் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளிநாட்டவரை நாடுகடுத்தி வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கன இந்தியர்களை மூன்று கட்டங்களாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நாடு கடத்தலில் பெரும்பாலானோர் மெக்சிகோ,பிரேசில், கொலம்பியா ஆகிய லத்தின் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர் .

பிரேசில்கண்டனம்:

அவர்களின் கால்களைச் சங்கிலியால் பிணைத்தும், கைகளை விளங்கிடும், அத்தியாவசிய தேவைகளுக்குச் சிரமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியும், நாடுக்கடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பிரேசில், தங்கள் நாட்டவரை அவமதித்ததாக அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல்,அதற்கு மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

வெள்ளை மாளிகை:

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று, "ASMR : சட்டவிரோத ஏலியன்கள் நாடு கடத்தல் விமானம் " என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அவ்வீடியோவானது இருந்தது.அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் அதிகாரிகள் நாடுகடத்தப்பட்டவர்களைச் சங்கிலியால் பிணைப்பது,அவர்கள் கைகள் காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏற்றுவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

எலான் மாஸ்க்:

இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்ற நாட்டவர்களைக் கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ உலக அளவில் பெரும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. இதற்கிடையில் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மாஸ்க், தனக்குச் சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் "ஹாஹா வாவ்" என்ற கமெண்ட்டுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deportation of Illegal Aliens The White House released a video


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->